புத்தகம் என்பது நமது வாழ்வில் நல்லொழுக்கத்தைக் கற்றுத் தருவதற்கும், அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் உதவும் நல்ல வழிகாட்டி… நண்பன்…
இத்தகைய சிறப்பு வாய்ந்த புத்தகத்தையும் அதன் பதிப்புரிமையையும் கொண்டாடும் தினம் தான் உலகப் புத்தக நாள்.
1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நடந்த யுனெஸ்கோ மாநாட்டில் உலகப் புத்தக நாள் கொண்டாடப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 உலகப் புத்தக நாள் கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி 2024 ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மின்னம்பலம் இணையதளத்தின் புதிய வலையொலி பக்கமான மின்னம்பலம் தமிழின் சந்திப்போமா? நிகழ்வில் புத்தகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஐயங்களை களையும் வகையில் 10 ஆளுமைகள் 10 நூல்களை பொது மக்களிடம் அறிமுகப்படுத்த உள்ளனர்.
இதில், மனுஷ்ய புத்திரன், கரன் கார்க்கி, மாலினி ஜீவரத்தினம், ஆண்டாள் பிரியதர்ஷினி உள்ளிட்ட சான்றோர்கள் பங்கெடுக்கின்றனர்.
இந்நிகழ்வு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 23) மாலை 5 மணியிலிருந்து ஏழு மணி வரை நடைபெறுகிறது.
நிகழ்வில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம்.
நிகழ்வு நடக்கும் இடம் குறித்த தகவல்கள் “மின்னம்பலம் தமிழ்” வளையொலி பக்கத்தில் விரைவில்…
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேர்தலுக்கு பிறகு செல்போன் கட்டணம் 15 – 17 சதவீதம் உயரும்” : பகீர் ரிப்போர்ட்!
Video: ‘பிரியாணிக்கு வெயிட்டிங்’… மீண்டும் கவனம் ஈர்த்த விஷால்