உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு வேலூரில் கொட்டும் மழையிலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மாரத்தானில் கலந்துகொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
உலகின் மிகக் கொடிய நோய்களில் ஒன்று எய்ட்ஸ். ஹியூமன் இம்யுனோ டெபிஷியன்சி வைரஸ் எனும் வைரஸ் கிருமியால் இந்தநோய் ஏற்படுகிறது.
பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொள்வதால் பெரும்பாலும் எய்ட்ஸ் பரவுகிறது.
உயிரை பறிக்கக்கூடிய இந்த நோய் குறித்த விழி்ப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாகவும், அதனை தடுக்கும் விதமாக உலகம் முழுவதிலும் டிசம்பர் 1 ஆம் தேதி எய்ட்ஸ் விழிப்புணர்வு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி தமிழகம் முழுவதும் இன்று(டிசம்பர் 1)எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
வேலூரில் உள்ள நறுவீ மருத்துவமனையின் சார்பில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டம் நடைபெற்றது.

இதில் மருத்துவர்கள் செவிலியர்கள் ஊழியர்கள் அனைவரும் கலந்துகொண்டு நறுவீ மருத்துவமனை முதல் சத்துவாச்சாரி வள்ளலார் சாலை வரை சென்று மீண்டும் நறுவீ மருத்துவமனைக்கு வந்தனர்.
இந்த மினி மாராத்தானை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா, நறுவீ மருத்துவமனையின் இயக்குநர் ஜி.வி. சம்பத்,ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த மாராத்தானில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பங்கேற்றனர்.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி!
லைகர் பட சிக்கல்.. நொந்து போன பெண்களின் கனவுக் கண்ணன் விஜய் தேவரகொண்டா
கலை.ரா