கைலாசாவில் வேலை வாய்ப்பா? விசாரிக்கிறது போலீஸ்

தமிழகம்

பிரபல சாமியார் நித்யானந்தாவின் கைலாசா நாட்டில் வேலைவாய்ப்பு என கூறி சமூக வலைதளத்தில் வெளியான விளம்பரம் தொடர்பாக சென்னை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

பாலியல் புகாருக்கு உள்ளாகி, தன்னை தானே கடவுள் என தெரிவித்து கொண்டு, தனக்கென தீவை வாங்கிக்கொண்டு கைலாசா என்ற தனி நாடு அறிவித்தவர் சாமியார் நித்யானந்தா.

இவரை போலீசார் தேடி வரும் நிலையில், சமூகவலைதளம் மூலமாகவே காட்சி தந்து சொற்பொழிவாற்றி வருகிறார்.

கைலாசாவில் இருந்துகொண்டே அவ்வப்போது சேவைகளை பாராட்டி பலருக்கு விருதுகளையும் அறிவித்து வருகிறார் நித்யானந்தா.

Work in Kailasa Chennai Police investigating

இந்தநிலையில், தற்போது கைலாசாவில் வேலைவாய்ப்பு என்ற விளம்பரம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவில் உள்ள பல்வேறு கைலாசா கிளைகளில் தகுந்த சம்பாவனையுடன் (ஊதியத்துடன்) கூடிய வேலை வாய்ப்பு என விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

ஓராண்டு சம்பாவனையுடன் (ஊதியத்துடன்) கூடிய பயிற்சிக்கு பிறகு வெளிநாட்டு கைலாசாக்களில் பின்வரும் துறைகளில் வேலைவாய்ப்பு எனவும்,

நித்யானந்தா இந்து பல்கலைக்கழகம், கைலாசாவின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஆலயங்கள், கைலாஸா IT wing, அயல்நாட்டு தூதரகம்,பிளம்பிங், எலக்ட்ரிக்கல்ஸ், பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு என  அறிவித்துள்ளது.

வேலைக்காக தொடர்பு கொள்வதற்காக இரண்டு செல்போன் எண்களை கொடுத்துள்ளனர். இதனை நம்பி பலரும் தொடர்பு கொண்டு விண்ணப்பித்து வருகின்றனர்.

Work in Kailasa Chennai Police investigating

அந்த தொலைபேசி எண்களை சோதனை செய்வதற்காக தொடர்பு கொண்டபோது, எல்லாதுறையிலும் வேலை இருப்பதாகவும் குறைந்த பட்ச சம்பளம் பத்தாயிரம் ரூபாய் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைலாசாவில் உள்ள பல்வேறு கிளைகளில் உணவு, மருத்துவ வசதி, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும் எனவும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஓராண்டுக்குப் பிறகு வெளிநாட்டிற்கும் வேலைக்காக அனுப்பப்படும் எனவும் அங்கு வேலை பார்ப்பதற்கு ஏற்ப சம்பளம் உயர்த்தி வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

வேலை மட்டுமல்லாது ஆன்மிகப்பயிற்சி அளிக்கப்படும் எனவும் அதில் உண்மையான பக்தியுடன் இருப்பவர்கள் கண்டறியப்பட்டு அடுத்தக்கட்டமாக சம்பளம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக தூதரக வேலை முதல் க்ளீனிங் வேலை வரை முதற்கட்டமாக 10 ஆயிரம் தான் சம்பளம் என தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பான தொலைபேசி உரையாடல் பதிவுகளை ஆதாரமாக வைத்து, இந்த  வேலை வாய்ப்பு விளம்பர அறிவிப்பு  உண்மையா அல்லது மோசடியா என்று சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

கலை.ரா

ராமஜெயம் கொலை: உண்மை கண்டறியும் சோதனைக்கு ரவுடிகள் ஒப்புதல்!

கள்ளக்குறிச்சி ஸ்ரீமதியின் செல்போன்: நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0