மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதையை பிறரும் பயன்படுத்துவதாக புகார் எழுந்த நிலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரை, சுற்றுலா தலங்களில் முக்கியம் வாய்ந்த ஒன்றாகும்.
இந்த மெரினா கடற்கரைக்கு தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
ஆனால் மாற்றுத்திறனாளிகள் மட்டும் கடற்கரை மணலில் எளிதில் சென்று கடலை ரசிக்க முடியாத ஒரு சூழல் இருந்தது.
இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று நடைபாதை அமைக்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை வைக்கப்பட்டு தற்போது மாற்றுத்திறனாளிகளுக்காக 1.09 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
சுமார் 380 மீட்டர் தூரத்திற்கு 3 மீட்டர் அளவிற்கு மரத்தாலான நடைபாதை என்பது அமைக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
மேலும் மாற்றுத்திறனாளிகள் மரப்பாதையில் செல்வதற்கு இலவசமாக வீல் சேரும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த பாதையை மாற்றுத்திறனாளிகள் முழுமையாக பயன்படுத்த முடியாமல் சாதாரண மக்களும் பயன்படுத்துவதால் மாற்றுத்திறனாளிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் மெரினாவில் திறக்கப்பட்ட மரப்பாதையை மாற்றுத்திறனாளிகளும், அவர்களுடன் துணைக்கு வருபவர்கள் மட்டுமே பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து உடனடியாக மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட நடைபாதையில் யாரும் செல்லாதவாறு இருப்பதற்காக போலீஸ் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த மரப்பாதை இருபுறமும், அதற்கிடையே உள்ள பகுதியிலும் என பாதுகாப்பு பணியில் 3 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கு என நிறுவப்பட்ட மரப்பாதையில் மற்றவர்களை நடக்க விடாமல் தடுப்பதற்கு போலீஸ் நிறுத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
கலை.ரா
பெரம்பலூரில் முதல் தொழில் பூங்கா: இவ்வளவு வேலைவாய்ப்பா?
பெண் மருத்துவர் தற்கொலை: பதற வைக்கும் கடிதம்!