மாணவிகள் வாட்சப் டி.பி : மகளிர் ஆணைய தலைவி எச்சரிக்கை!

Published On:

| By Jegadeesh

மாணவிகள் வாட்சப் டி.பி.யில் தங்களது புகைப்படத்தை வைக்க வேண்டாம் என்று மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி அறிவுறுத்தியுள்ளார்.

பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான கருத்தரங்கம் சென்னை தண்டையார்பேட்டையில் இன்று(ஜூன் 28) நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் திலகவதி, ஆதி லட்சுமி, லோக மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி, “மகளிர் ஆணைய தலைவியாக என்னை முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பில் நியமித்த நாள் முதல் நிறைய விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இன்று உலகத்தையே ஆட்டிப் படைக்கக்கூடிய பிரச்சனை சைபர் கிரைம்.

குறிப்பாக, பெண்கள் சமூக வலைதளங்களில் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாக கருத்தரங்குகளை நடத்தி வருகிறோம்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர், கலைஞர் இவர்களெல்லாம் இல்லையென்றால் நாங்கள் இல்லை. அவர்களெல்லாம் எங்களுக்காக போராடிய தலைவர்கள். பெண்களுக்கான சொத்து உரிமை எனப் பல சட்டங்களை கூறலாம்.

இதைப் பற்றியெல்லாம் கல்லூரி பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். மாணவிகள் வாட்சப் டிபி யில் புகைப்படங்களை வைக்க வேண்டாம். அந்தப் புகைப்படங்களை எடுத்து மார்ஃபிங் செய்கிறார்கள். தொழில் நுட்பத்தில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ, அதே அளவு தீமைகளையும் கொண்டுள்ளது. அதனை எப்படி கையாள வேண்டும் என்பது முக்கியம். அதை மாணவிகளுக்கு சொல்லிக்கொடுத்து வருகிறோம்” என்று கூறினார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

விண்ணில் பாய சந்திரயான்-3 தயார்: இஸ்ரோ அறிவிப்பு!

கர்நாடகாவில் அரிசிக்கு பதிலாக பணம்: குமுறும் சித்தராமையா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share