பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக புதிய திட்டத்தை தமிழ்நாடு காவல்துறை இன்று (ஜூன் 20) அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை இன்று(ஜூன் 20) வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரவு நேரங்களில் தனியாக பயணிக்க அச்சப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக, ‘பெண்கள் பாதுகாப்பு திட்டம்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழ்நாடு காவல்துறை.
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என நினைக்கும் பெண்கள், 1091, 112 , 044-23452365, 044-28447701 ஆகிய உதவி எண்களுக்கு தொடர்பு கொண்டால், அவர்கள் இருக்கும் இடங்களுக்கே காவல்துறை ரோந்து வாகனங்கள் வந்து அழைத்துச் செல்லும்.
அனைத்து நாள்களிலும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் இந்த சேவை இலவசமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சென்னையில் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்: அட்டவணை வெளியானது!
தமிழக ஆளுநரை மாற்றாவிட்டால் தீக்குளிப்பேன்: திமுக நிர்வாகி மிரட்டல்!