பெண் ஓட்டுநர்கள் மானிய விலையில் ஆட்டோ பெற விண்ணப்பிக்கலாம்!

Published On:

| By Minnambalam

பெண் ஓட்டுநர்கள் மானிய விலையில் ஆட்டோ பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர் மற்றும் தானியங்கி மோட்டார் பழுது பார்க்கும் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஓட்டுநர்களுக்கு மானிய விலையில் ஆட்டோ வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 18 வயதுக்கு மேல் 60 வயதுக்கு உட்பட்ட பெண் ஓட்டுநர்களாக இருக்க வேண்டும்.

விருப்பம் உள்ள பெண்கள் நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல் மற்றும் புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தினை https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கி முழுமையாக பூர்த்தி செய்து  தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ராஜ்

சென்னையில் விதிமீறிய கட்டடங்கள்: கட்டுமானப் பொருட்கள் பறிமுதல் – இடத்துக்கு சீல்!

ஏற்றுமதி செய்ததைவிட இறக்குமதியை அதிகமாக செய்த இந்தியா: சீனா வெளியிட்ட தகவல்!  

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel