சென்னை துரைப்பாக்கத்தில் இளம் பெண் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டு உடலை சூட்கேசில் வைத்து வீசிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை துரைப்பாக்கம் பகுதியில் தனது சகோதரரின் வீட்டில் மணிகண்டன் என்பவர் தங்கியிருந்துள்ளார். சகோதரரின் குடும்பத்தினர் அனைவரும் உறவினர்கள் வீட்டுக்கு சென்ற சமயத்தில், மணலியை சேர்ந்த வெள்ளையம்மாள் என்ற தீபா என்பவரை இரு நாள்களுக்கு முன் அழைத்து வந்துள்ளார். பின்னர், அவர்களுக்குள் ஏதோ தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால், மணிகண்டன் அந்த பெண்ணை வெட்டிக் கொன்றதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து, உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்துள்ளார். பின்னர், அந்த சூட்கேசை எடுத்து சென்று சிசிடிவி கேமரா இல்லாத பகுதியில் வீசி விட்டு சென்றுள்ளார். பிறகு, எதுவும் தெரியாதது போல வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்துள்ளார்.
இந்த நிலையில்,சூட்கேசில் பெண்ணின் உடலை கண்டு அதிர்ந்து போன மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, துரைப்பாக்கம் போலீசார் 100 மீட்டர் சுற்றவுக்குள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, மணி டிராலி போல சூட்கேஸை இழுத்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி அந்த பகுதி மக்களிடத்தில் விசாரித்த போது, சம்பந்தப்பட்ட இளைஞர் வசிக்கும் வீட்டையும் அடையாளம் காட்டினர்.
போலீசார் வீட்டுக்குள் சென்ற போது, மணிகண்டன் ஹாயாக உறங்கிக் கொண்டிருந்துள்ளார். அவரிடம் கொலை பற்றி போலீசார் விசாரித்த போது, எந்த பதற்றமும் இல்லாமல் பதில் அளித்துள்ளார். மேலும், வீட்டுக்குள் ஆங்காங்கே ரத்த கறையும் இருந்துள்ளது.
இதனையடுத்து அவரை கைது செய்துள்ள துரைப்பாக்கம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகையில், 15 நாட்களுக்கு முன்தான் அந்த வீட்டுக்கு மணி வந்ததாகவும் வேலை தேடி கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மணியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துரைப்பாக்கத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
டெல்லி முதல்வராக அதிஷி பதவியேற்பு எப்போது?
படுகா உடையில் பூஜா கண்ணன்… சாய் பல்லவி என்ன செய்கிறார் தெரியுமா?