ரூ.2000 நோட்டுகள் வாபஸ்: தயாராகும் வங்கிகள்!

தமிழகம்

ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், அதனை வைத்துள்ளவர்கள் வருகிற 23ம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும் ஆர்.பி.ஐ அறிவித்தது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நேற்று முதலே வங்கிகளை வாடிக்கையாளர்கள் அணுக தொடங்கியுள்ளனர். அதுபோன்று ஏ.டி.எம் மூலமாகவும் டெபாசிட் செய்ய தொடங்கியுள்ளனர். இந்தச்சூழலில் வரும் 23ஆம் தேதி வங்கிகளில் வழக்கத்தை விடக் கூட்டம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘இன்று வங்கிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. நாளை திங்கட்கிழமை வங்கி கிளைகள் செயல்படும். அப்போது வங்கி ஊழியர்களிடம் பணத்தை மாற்ற என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று கலந்தாலோசிக்க உள்ளோம்.

கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் வங்கி கிளைகளில் ரூ.2 ஆயிரம் நோட்டை மாற்றச் சிறப்பு கவுண்ட்டர்கள் உருவாக்கப்படும். அதே நேரத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் வாடிக்கையாளர்கள் ஒருவர் பின் ஒருவராக வங்கிகளுக்கு வரும் வகையில் வரிசையில் நிற்க ஏற்பாடு செய்யப்படும். கூட்டம் அதிகமானால் பந்தலும் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.

அதே நேரத்தில் வயதானவர்கள் எளிதாகப் பணத்தை மாற்றும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும். ஒருவர் ஒரே நேரத்தில் பத்து 2 ஆயிரம் ரூபாய்களை மாற்றலாம் எனவே, வங்கி வாடிக்கையாளர்கள் ரூபாய் நோட்டுக்களை மாற்ற வரும் போது, அவர்களுக்கு பணம் வழங்குவதற்காகக் கூடுதலாகப் பணத்தை வங்கிகளில் இருப்பு வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தனர்.

சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான என் காமகோடி, மனி கண்ட்ரோல் ஊடகத்திடம் கூறுகையில், “2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கி போதிய அவகாசம் அளித்துள்ளதாலும், அவை அதிக அளவில் புழக்கத்தில் இல்லாததாலும், இந்த முறை வங்கிக் கிளைகள் பெரிய அழுத்தத்தை எதிர்கொள்ளாது என்று நினைக்கிறேன்” என கூறியுள்ளார்.

பிரியா

அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரமா? : அண்ணாமலை பேட்டி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *