அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், போரட்டத்தை கைவிட்டு சாம்சங் ஊழியர்கள் இன்று (அக்டோபர் 17) பணிக்கு திரும்பியுள்ளனர்.
காஞ்சிபுரம் ஸ்ரீபெரம்பதூரில் சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஊதிய உயர்வு, சங்கம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இவர்களின் போராட்டத்திற்கு திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளும், எதிர்கட்சிகளான அதிமுக, நாம் தமிழர் கட்சியும் ஆதரவு தெரிவித்தனர்.
இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ. அன்பரசன் மற்றும் சி.வி. கணேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் சாம்சங் நிறுவனத்துடன் நடத்தப்பட்ட பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. இதற்கிடையே கடந்த 9ஆம் தேதி சுங்குவார்சத்திரத்தில் போராட்ட பந்தல் இரவோடு இரவாக அகற்றப்பட்டு, ஊழியர்களும் கைதும் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்ற நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டு பணிக்கு திரும்புவர் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை சிஐடியு மாநில தொழிற்சங்க தலைவர் சௌந்தர்ராஜனும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் சுமார் 39 நாட்களுக்கு பிறகு இன்று பணிக்கு திரும்பினர்.
மேலும் எந்தவித அசாம்பவித சம்பவங்களும் ஏற்படாமல் இருக்க, சாம்சங் நிறுவனம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Bigg Boss : யானையை அடக்கனும்னா 10 பேர் வேணும்! – எவிக்சன் குறித்து ரவீந்தர் ரவுசு!
கைவிடப்பட்ட பங்கருக்குள் கிடந்த படுக்கை, ஏ.கே.47 … இஸ்ரேல் ராணுவம் நடத்தியஅதிரடி!