கோடைக்காலத்தைச் சமாளிக்க காற்றாலை மின்சாரம்!

Published On:

| By Kavi

தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி 10,000 மெகா வாட்டாக உயர்ந்துள்ளதால் கோடைக்காலத்தில் தமிழகத்தில் அதிகரிக்கும் மின்தேவையைப் பூர்த்தி செய்வதில் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பெரிதும் உதவும் என்று இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய அளவில் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, பல்லடம், உடுமலை, தேனி உள்ளிட்ட இடங்களில் 8,152 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 11,800 காற்றாலைகள் செயல்பட்டு வருகின்றன.

காற்றாலை மின் உற்பத்தி ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இருக்கும். அதிகரித்து வரும் மின்தேவையைப் பூர்த்தி செய்வதில் சூரிய ஒளி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி துறை முக்கிய பங்கு வகிக்கிறது.

இதைக் கருத்தில்கொண்டு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிறப்புத் திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன.

தமிழகத்தில் காற்றாலை கட்டமைப்பு வசதி 10,000 மெகா வாட்டாக அதிகரித்துள்ள நிலையில் “காற்றாலை மின் உற்பத்தியில் தேசிய அளவில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மொத்த மின் உற்பத்திக்கான கட்டமைப்பு 8,500 மெகாவாட்டாக இருந்தது.

மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் சிறப்புத் திட்டங்கள் காரணமாக உள்கட்டமைப்பு வசதி படிப்படியாக உயர்ந்து 9,000-ஐ கடந்தது,

தற்போது காற்றாலை மின் உற்பத்தி 10,000 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது.

தற்போது காற்றின் வேகம் சற்று அதிகரித்துள்ளது. இருப்பினும் நிலையாக இல்லை.

இந்த ஆண்டுக்கான காற்று சீசன் ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்க படுகிறது. அக்டோபர் வரை நீடிக்கும்.

எனவே கோடை காலத்தில் தமிழகத்தில் அதிகரிக்கும் மின்தேவையைப் பூர்த்தி செய்வதில் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பெரிதும் உதவும்” என்று  இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ராஜ்

“ரோஹிணி ஐ.ஏ.எஸ் பற்றி பேசக்கூடாது”: பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு!

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment