கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அருகே மின்கம்பம் விழுந்து காட்டு யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகத்தில் தடாகம் காப்பு காட்டில் இருந்து 30 வயதுள்ள காட்டு யானை ஒன்று உணவு தேடி பூச்சியூர் பகுதிக்கு சென்றுள்ளது. அப்போது பூச்சியூர் குருவம்மா கோயில் அருகே யானை மீது மின்கம்பம் விழுந்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.
வனத்துறை அதிகாரிகள் யானையின் உடலை கைப்பற்றி உயிரிழந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யானைக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டதால், மின்கம்பத்தில் உரசியிருக்கலாம் என்று வனத்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர். மருத்துவத்துறை அதிகாரிகள் யானையின் உடலை உடற்கூராய்வு செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது பொதுமக்கள் மற்றும் வன விலங்கு ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
வைரலாகும் கோலி குறித்த கேள்வி!
மதுரை கூடுதல் நீதிமன்ற கட்டிடம்: அடிக்கல் நாட்டிய சந்திரசூட்