தமிழ்நாட்டில் இன்று (மார்ச் 23) பிறை தென்படாத நிலையில் நாளை (மார்ச் 24) முதல் ரமலான் நோன்பு தொடங்கும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதின் முகமது அயூப் அறிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்று ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருப்பதாகும். ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள்.
ரமலான் மாத இறுதி நாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், நாளை (மார்ச் 24) முதல் ரமலான் நோன்பு தொடங்கும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் வெளியிட்ட அறிவிப்பில்,
“ரமலான் மாதப்பிறை இன்று தமிழ்நாட்டில் எங்கும் தென்படவில்லை. இதனால் ரமலான் நோன்பு (நாளை) வெள்ளிக்கிழமை தொடங்கும்” என்று கூறியுள்ளார்.
சவூதி அரேபியாவில் இன்று (மார்ச் 23) ரமலான் நோன்பு தொடங்கிய நிலையில் ஒருநாள் கழித்து தமிழ்நாட்டில் ரமலான் நோன்பு தொடங்க உள்ளது.
ஆண்டுதோறும் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் நோன்பு கஞ்சிக்கு அரிசி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி நோன்புக்கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 6,500 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.
ராஜ்
சென்னை – கோவை வந்தே பாரத்: எங்கெங்கு நிற்கும்?
IND VS AUS: சொந்த மண்ணில் 4 ஆண்டுகளுக்கு பிறகு தோல்வி!