கிச்சன் கீர்த்தனா: எவ்வளவு சாப்பிட்டாலும் சிலருக்கு எடை ஏறாதது ஏன்?

தமிழகம்

சாப்பாட்டுத் தட்டைப் பார்த்தாலே எனக்கெல்லாம் வெயிட் ஏறுது…  என் ஃபிரெண்ட் ஒருத்தர், பழைய சோறு முதல் மிட்நைட் பிரியாணி வரை கண்டதையும் சாப்பிடுறார். ஆனாலும் அவருக்கு மட்டும் எடை ஏறாதது ஏன்? இது முட்டாள்தனமான எண்ணமா அல்லது இதன் பின்னணியில் ஏதேனும் அறிவியல் இருக்கிறதா? உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரிடம் விசாரித்தோம்.

“அப்படிப்பட்டவர்களுக்கு Lean muscle mass எனப்படும் ஒல்லியான தசை அடர்த்தியின் சதவிகிதம் அதிகமாக இருக்கலாம். கொழுப்பின் அடர்த்தி குறைவாக இருக்கலாம்.

உடலானது இயக்கத்திலிருக்கும்போதும், ஓய்வில் இருக்கும்போதும், தசையானது கொழுப்பைவிட வேகமாக கலோரிகளை எரிக்கும் தன்மை கொண்டது என்பதால் அதிக வளர்சிதை மாற்றத் திறன் இருப்பவர்களின் உடல், குறைந்த வளர்சிதை மாற்றத் திறன் கொண்டவர்களின் உடலோடு ஒப்பிடும்போது குறிப்பிட்ட நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்கக்கூடியதாக இருக்கும்.

இந்த வளர்சிதை மாற்றத் திறனானது சிலருக்கு மரபியல்ரீதியாக வருவது. பெரும்பாலானவர்களுக்கு அவர்களது வாழ்வியல் முறையின் அடிப்படையில் அது தீர்மானிக்கப்படுகிறது.

ஓய்வில் இருக்கும்போதும், உணவை உட்கொள்ளாமல் இருக்கும்போதும் நம் உடல் எரிக்கும் கலோரிகளின் எண்ணிக்கை ‘பேஸல் மெட்டபாலிக் ரேட்’ BMR (Basal metabolic rate) எனப்படுகிறது. குறைவான பி.எம்.ஆர் விகிதம் உள்ளவர்களுக்கு எளிதில் எடை கூடிவிடும். காரணம், குறைவான வளர்சிதை மாற்ற ஆற்றல்.

அன்றாட வேலைகளைச் செய்வதால் எரிக்கப்படும் கலோரிகளை ‘நீட் கலோரி’ (NEAT calorie: Non-Exercise Activity Thermogenesis) என்கிறோம்.

அதாவது, நாம் திட்டமிடாமல் செய்கிற வொர்க் அவுட், விளையாட்டு போன்றவையும் இந்த நீட் கலோரியில் அடக்கம்.

எனவே உடலியக்கம் அதிகமாக இருப்பவர்கள், அதிக கலோரிகளை எரிக்கிறார்கள். அதனால் அவர்களது ‘பேஸல் மெட்டபாலிக் ரேட்’ அதிகரிக்கிறது. எனவே சின்னச் சின்ன உடலியக்கமும் சில கலோரிகளை எரிக்கும். எடை கூடாமல் பாதுகாக்கும்.

எல்லாவற்றையும் தாண்டி இந்த விஷயத்தில் மரபியலுக்கும் முக்கியப் பங்கு உண்டு. பூசணிக்காய் வடிவ உடல்வாகை, சைஸ் ஸீரோவாக மாற்ற நாம் முயன்று கொண்டிருப்போம்.

நம் அம்மா, பாட்டியின் பழைய புகைப்படங்களைப் பார்க்கும்போது அவர்களும் பூசணிக்காய் வடிவ உடல்வாகுடன் இருந்தது தெரியவரும். அது நம் மரபணுக்கள் சம்பந்தப்பட்டது என்ற தெளிவும் நமக்கு வேண்டும்.

தூக்கத்துக்கும் எடைக்குறைப்புக்கும் நெருங்கிய தொடர்புள்ளதை சமீப கால ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.

போதிய அளவு, ஆழ்ந்த உறக்கம் உள்ளவர்களுக்கு எடை குறைப்பு முயற்சி எளிதில் வெற்றியைக் கொடுக்கிறது. நல்ல தூக்கம் என்பது நம் வளர்சிதை மாற்றச் செயல்பாட்டுக்கு மிகவும் முக்கியம்.

ஸ்லிம் உடல்வாகு என்பது இலக்காக இருக்கத் தேவையில்லை. உடலை ஆரோக்கியமாகவும் சரியான எடையிலும் வைத்துக்கொள்வதுதான் இலக்காக இருக்க வேண்டும்.

அதற்கேற்ற முயற்சிகளில் இறங்குங்கள். உங்கள் உடலை நேசியுங்கள்” என்று விளக்கமளித்தார்.

தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த பீகார் அதிகாரிகள்!

எந்த கொம்பனானாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவேன்: முதல்வர்

Why do some people not gain weight
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *