வதந்தி, அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு ஈஷா மையம் கோரிக்கை வைத்துள்ளது.
ஈஷா மையத்தில் யோகா பயிற்சிக்காக வந்த பெண் மரணமடைந்தது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.
இந்தநிலையில் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஈஷா மையம், அரசுக்கு சில கோரிக்கைகளையும் வைத்துள்ளது.
அதில், சுபஶ்ரீயின் அகால மரணம் துரதிஷ்டவசமானது. யாரும் எதிர்பாராத இத்துயர சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறை விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எவ்வித கருத்தும் வெளியிட கூடாது என்ற உறுதியில் இத்தனை நாட்கள் அமைதி காத்தோம்.
சுபஸ்ரீ வழக்கு விசாரணைக்கு தேவையான அனைத்து விவரங்களையும் காவல்துறைக்கு முறையாக வழங்கி உள்ளோம்.
ஊடக முகமூடிகளை அணிந்து கொண்ட சில யூ-டியூப்பர்கள், புலனாய்வு என்ற பெயரில் மர்ம நாவல்கள் எழுதும் திறன் படைத்த ஊடக எழுத்தாளர்கள், மக்கள் ஆதரவு இல்லாத சில உதிரி அமைப்புகள் இதனை தங்கள் சுய லாபத்திற்காக அரசியலாக்க முயற்சி எடுத்து வருகின்றனர்.
இவ்வழக்கு குறித்த வதந்திகள், அவதூறுகளை சில இயக்கங்களும், ஊடகங்களும் உள்நோக்கத்தோடு செய்திகளாக வெளியிடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
வன்மமான அவதூறுகள் மூலம் மக்கள் மத்தியில் குழப்பத்தை பரப்பும் நபர்கள், இயக்கங்கள், ஊடகங்கள் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழிப்புணர்வான உலகத்தை உருவாக்கும் எங்கள் நோக்கத்தையும், உறுதியையும் எவராலும் கலைத்து விடமுடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை.ரா
துணிவு படம் எப்படி? – ரசிகர்கள் ட்விட்டர் விமர்சனம்!
வாரிசு: கலங்கிய தமன்… கட்டி அணைத்த வம்சி! தட்டி கொடுத்த ஷாம்!
உதிரி மயிர்னு சொன்னது கோபாலை அல்ல..
தடை செய்ய வேண்டும், பிள்ளை பெற்ற அப்பா மகளை விடுவிக்க கூறி பேட்டி கொடுப்பது அவதூரா…அரசு நிலத்தை மீட்க வேண்டும்
அத்தனை வக்பு போர்டு நிலங்களை மீட்ட பின்னர்..கோரிக்கை நாயமானது சார்..