விழுப்புரம் சரக டிஐஜியாக பணியாற்றி வந்த எம். பாண்டியனின் பணி காலம் இன்றுடன் (மார்ச் 31) முடிவடைந்தது. இதையடுத்து விழுப்புரம் சரகத்துக்கு அடுத்த டிஐஜி யார் என்ற போட்டி உருவாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி உட்கோட்டத்தில் 02.12.1999இல் டிஎஸ்பியாக பணியில் சேர்ந்த பாண்டியன் 22 வருடங்களுக்கு பிறகு 2021இல் விழுப்புரம் சரக டிஐஜியாக பொறுப்பேற்றார்.
மூன்று வருடங்களாக டிஐஜியாக பணியாற்றிய அவர் இன்று, மார்ச் 31 ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு ஓய்வு பெற்றார்.

இந்தசூழலில் விழுப்புரம் சரகம் டிஐஜி கூடுதல் பொறுப்பாக காஞ்சிபுரம் டிஐஜி பகலவன் பொறுப்பேற்றார்.
“அதுபோன்று, நிரந்தர டிஐஜியாக ஐபிஎஸ் அதிகாரி பொன்னியை நியமிக்கலாம் என காவல்துறையில் பலரும் பரிந்துரை செய்தாலும், உயர் அதிகாரிகள் மட்டத்தில் ஜியாவுல் ஹக் ஐபிஎஸை நியமிக்க முடிவு செய்துள்ளனர் என்கின்றனர்” காவல்துறை வட்டாரத்தில்.

“ஜியாவுல் ஹக் ஐபிஎஸ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர். தமிழகத்தி்ல் ஏஎஸ்பியாக பணியில் சேர்ந்தவர். அப்போது முதல் தீவிரமாகவும் ஆர்வமாகவும் தமிழ் கற்றுக்கொண்டு எஸ்பி, டிஐஜியாக பதவி பெற்றவர்.
இவர் இன்று வரையில் காலையில் டிஎஸ்ஆர் (Daily station report) வாசிக்கும் போது தமிழில்தான் வாசிப்பார்“ என்று தமிழக காவல்துறை அதிகாரிகளே ஆச்சரியப்பட்டுபோகிறார்கள்.
வணங்காமுடி
பற்களை பிடுங்கிய ஏ.எஸ்.பி. : தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை!
பொதுச்செயலாளர் எடப்பாடி: தேர்தல் ஆணையத்தில் ஆவணங்கள்!