அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருவதால் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கும், விழுப்புரத்தில் பள்ளிகளுக்கும் இன்று (அக்டோபர் 19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடந்த 15ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன்காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் வடக்கு அந்தமான் கடற்பகுதியின் மேல் நாளை (அக்டோபர் 20) புதிய மேல் அடுக்கு காற்று சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது என்றும், மத்திய வங்கக்கடலில், வரும் 22 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பிறகு வடமேற்கு நோக்கி நகர்ந்து, மேலும் வலுப்பெறக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே நேற்று இரவு முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
அதே போன்று தொடர் மழை காரணமாக விழுப்புரத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பிக் பாஸ் சீசன் 8 : அர்ணவ் செய்த துரோகம்!
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் : ஆளுநர் விளக்கம்… ஸ்டாலின் பதிலடி!