சென்னையில் மத்திய அரசு திட்டங்கள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிக் கொண்டிருக்கும் போது, “வெள்ள நிவாரணம் எங்கம்மா” என ஒரு பெண் கேள்வி எழுப்பினார்.
சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று (ஜனவரி 4) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.
அப்போது கடந்த் 10 ஆண்டுகளாக மத்திய அரசு எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி கொடுத்திருக்கிறது என்று புள்ளி விவரங்களோடு கூறினார்.
அவர் தனது பேச்சை முடிக்கும் தருவாயில் கூட்டத்தில் இருந்த ஒரு பெண் வெள்ள நிவாரண நிதி குறித்து கேள்வி எழுப்பினார்.
“அம்மா வெள்ள நிவாரண நிதியே எனக்கு கிடைக்கலமா?,
அமைச்சர்: “நிவாரண நிதி கிடைக்கும்…”
“எங்க கிடைக்குது. கீழ் வீட்ல இருக்கன் நானு”
அமைச்சர்: “கிடைக்கும்மா… கிடைக்கும்.. நீங்களும் கீழ் வீட்ல இருக்கீங்க.. இன்னும் நிறைய பேர் கீழ் வீட்ல இருக்காங்க.. எல்லோருக்கும் சேர்த்து போட்டு கொடுப்போம்”
“500 வீடுகள் இருக்கு, எனக்கு ஒரு ஆளுக்கு மட்டும்தான் வரல”
அமைச்சர்: “அப்படிங்களா, உங்க விவரத்த கொடுங்க.. ஏன் உங்களுக்கு மாத்திரம் மட்டும் வரலனு பாப்போம்.”
“பேங்க்ல கூட போய் கேட்டேன்”
அமைச்சர்: “ரொம்ப நல்லது. உங்க கஷ்டம் புரியுது. விவரத்த கொடுங்க. உங்களுக்கு ஏன் கிடைக்கலனு கேட்டு பார்ப்போம்” என கூறிவிட்டு அடுத்து மத்திய அரசின் திட்டங்கள் குறித்த தன் பேச்சை நிறைவு செய்தார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ வாழ்க்கை வரலாறு படம்!
சென்னையில் கொரோனாவிற்கு ஒருவர் உயிரிழப்பு!
மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள்: தேதி அறிவிப்பு!
பிரதமர் மோடியை சந்தித்த உதயநிதி