பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை பிரம்மாண்டமாக அயோத்தியில் கொண்டாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் சரயு நதிக்கரையில் அமைந்துள்ள அயோத்தி, சாகேத் என்றும் அழைக்கப்படும். இந்தியாவின் பழமையான நகரமான இது, ராமர் பிறந்த இடமாகவும், ராமாயணத்தின் அமைப்பாகவும் கூறப்படுகிறது.
தீபாவளியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை அயோத்தியில் ராமர் கோவிலில் தரிசனம் மற்றும் பூஜையில் ஈடுபட உள்ளார்.
பின்னர் பிரமாண்ட ராமர் கோவில் கட்டும் இடத்தையும் மோடி ஆய்வு செய்து, ராமருக்கு அடையாளமாக முடிசூட்டு விழா நடத்துவார் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலை சுமார் 6.30 மணியளவில், சரயு நதிக்கரையில் நடைபெறும் “ஆரத்தி”யை பிரதமர் காணவுள்ளார்,
அதைத் தொடர்ந்து பிரமாண்டமான “தீபோத்சவ்”கொண்டாட்டங்களை அவர் தொடங்கி வைப்பார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஆறாவது தீபோத்சவ் விழா நடைபெறுகிறது, முதல் முறையாக மோடி இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார். இந்த விழாவில் 17 லட்சம் மண் விளக்குகளில் தீபங்கள் ஏற்றப்பட்டு புதிய சாதனை நிகழ்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் மூன்று நாள் தீபோத்சவ விழாவில், ரஷ்யா, மலேசியா, இலங்கை மற்றும் பிஜி ஆகிய நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களின் ராம்லீலா நிகழ்ச்சிகள் முக்கிய சிறப்பம்சங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
சரயு நதிக்கரையில் உள்ள ராம் கி பைடியில் 3-டி “ஹாலோகிராபிக் ப்ரொஜெக்ஷன் மேப்பிங் ஷோ” மற்றும் பிரமாண்ட இசை லேசர் ஷோவையும் மோடி பார்வையிடுவார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் வருகையையொட்டி வண்ண, வண்ண பசுமை பட்டாசுகள் வெடித்து, கண்கவர் நிகழ்ச்சிகளை நடத்த உத்திரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
கலை.ரா
ராமஜெயம் கொலை: 20 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை!
டி20 உலகக்கோப்பை: சூப்பர் 12ல் இலங்கை, நெதர்லாந்து