நித்யானந்தா, பிரேமானந்தா, ஆத்மானந்தா என்றாலே பிரச்சனையாக தான் இருக்கிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. where is nithyanandha
சர்ச்சை சாமியாரான நித்யானந்தா பாலியல் வழக்குகளில் சிக்கி தற்போது தலைமறைவாக உள்ளார். 2019 ஆம் ஆண்டு நாட்டை விட்டு தப்பி ஓடியவர் இன்றுவரை எங்கிருக்கிறார் என்று உறுதியாக தெரியவில்லை.
ஆனால் யூடியூப் சேனல்களில் தோன்றி உரையாற்றுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
அவர் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அங்கிருந்து வீடியோ வெளியிட்டு வருவதாக கூறப்படும் நிலையில், அதுவும் புரியாத புதிர்தான். க்ரீன் ஸ்கீரின் மூலம் வேறு எங்கேயோ இருந்து வீடியோ வெளியிடுகிறார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது நித்யானந்தா எங்கிருக்கிறார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
என்ன வழக்கு! where is nithyanandha

நாகப்பட்டினம்,திருவாரூர் மாவட்டங்களில் உள்ள தேவாரண்யம் ஸ்ரீபோ. கா. சாதுக்கள் மடம், ஸ்ரீ அருணாச்சல ஞானதேசிக சுவாமிகள் மடம், ஸ்ரீ பாலசுவாமி சங்கரசாமி மடம், ஸ்ரீ சோமநாத சுவாமி கோயில் மடம் ஆகிய நான்கு மடங்களின் மடாதிபதியாக நித்யானந்தாவை நியமித்து மடாதிபதி ஆத்மானந்தா அறிவித்தார்.
இது தொடர்பான உரிமையியல் வழக்குகள் நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இந்தநிலையில் பக்தர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் 4 மடங்களுக்கும் தக்காரை நியமித்து அறநிலையத்துறை உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, நித்யானந்தா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, அறநிலையத் துறையின் முடிவில் தலையிட முடியாது என்று கூறி நித்யானந்தா மனுவை தள்ளுபடி செய்தார்.
ஈகுவடாரில் நித்தி where is nithyanandha
இதை எதிர்த்து நித்யானந்தா மேல்முறையீடு செய்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியம் மற்றும் சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜனவரி 31) விசாரணைக்கு வந்தது.
அப்போது அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண் நடராஜன், “நித்யானந்தா இந்தியாவிலேயே இல்லை. தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடாரில் இருக்கிறார்” என்று கூறினார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், நித்யானந்தா, பிரேமானந்தா ஆத்மானந்தா என்றாலே பிரச்சனை தான். நித்யானந்தா இந்தியாவிலேயே இல்லை. அவர் மீது வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. எனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் தலையிட முடியாது” என்று கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். where is nithyanandha