இந்த மாதம் ரூ.1000 எப்போது? : தீபாவளிக்கு முன் வழங்கப்படுமா?

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.1000 தொகையானது இந்த மாதம் தீபாவளிக்கு முன்னதாக வழங்கப்படும் என அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு அரசு குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கி வருகிறது.

முதல் மாதம் செப்டம்பர் 15ஆம் தேதி வழங்கப்பட்ட நிலையில் இரண்டாவது மாதம் ஒரு நாளுக்கு முன்னதாகவே அக்டோபர் 14ஆம் தேதி 1.06கோடி பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

இதனிடையே மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பித்தவர்களில் லட்சக் கணக்கானோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. எனினும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தகுதியுடையவர்களாக இருந்தால் அவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று கூறி அக்டோபர் 25ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசு கால அவகாசம் வழங்கியது.

இதில் 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்தனர். இவர்கள் விண்ணப்பங்கள் குறித்த கள ஆய்வுப் பணிகளும் நடந்து வருகின்றன. இதில் தகுதி பெற்றவர்களுக்கு நவம்பர் 25ஆம் தேதி முதல் குறுஞ்செய்தி அனுப்பப்படவுள்ளது.

இந்தச்சூழலில் இந்த மாதம் எப்போது ரூ.1000 வரவு வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

வரும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை வரவிருக்கும் நிலையில், அதைக் கொண்டாடுவதற்காக மகளிர் உரிமைத் தொகை முன் கூட்டியே வழங்கப்படலாம் எனவும் அரசு வட்டார தகவல்கள் கூறுகின்றன.

அதன்படி நவம்பர் 9 அல்லது 10ஆம் தேதி வழங்கப்படலாம் எனக் கூறப்படும் நிலையில், இதுகுறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு ஓரிரு நாட்களில் வெளியிடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

“தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, முன்கூட்டியே இந்த தொகை வரவு வைக்கப்பட்டால்  வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கவோ, அல்லது குழந்தைகளுக்குத் துணிமணி எடுக்கவோ பிரச்சினை இல்லாமல் இருக்கும். அதனால் அரசு முன்கூட்டியே வழங்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறோம்” என்கிறார்கள் இத்திட்டத்தின் பயனாளிகள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

2 Years of ’Jai Bhim’: முதல்வருக்கு நன்றி கூறிய சூர்யா

‘லேபில்’ வெப் சீரிஸ்: 2வது ட்ரெய்லர் எப்படி இருக்கு?

அரசு பேருந்தில் அழைத்து செல்லப்பட்ட அமர் பிரசாத் ரெட்டி

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts