2024ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை (செப்டம்பர் 13) முதல் தொடங்குகிறது.
2024ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி 16ஆம் தேதி திருவள்ளுவர் தினம், மாட்டுப் பொங்கல், ஜனவரி 17ஆம் தேதி உழவர் திருநாள், காணும் பொங்கலையொட்டி தொடர் அரசு விடுமுறை உள்ளது. அதற்கு முன்பாக இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 13 – 14) விடுமுறை நாட்கள் என்பதால் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் விடுமுறையாக வருகிறது.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடங்கப்பட உள்ளது. ஜனவரி 11ஆம் தேதி ரயிலில் பயணிக்க செப்டம்பர் 13ஆம் தேதி (நாளை – புதன்கிழமை) முன்பதிவு தொடங்குகிறது.
ஜனவரி 12ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பயணிக்க செப்டம்பர் 14ஆம் தேதியும், ஜனவரி 13ஆம் தேதி (சனிக் கிழமை) பயணிக்க செப்டம்பர் 15ஆம் தேதியும் பொங்கலுக்கு முந்தைய நாள், அதாவது ஜனவரி 14ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ரயிலில் பயணிக்க செப்டம்பர் 16ஆம் தேதியும், பொங்கல் அன்று ஜனவரி 15ஆம் தேதி (திங்கட்கிழமை) பயணிக்க செப்டம்பர் 17ஆம் தேதியும் முன்பதிவு தொடங்குகிறது.
ரயில் டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்குத் தொடங்கும். ஐஆர்சிடிசி இணையதளம் வழியாகவோ அல்லது டிக்கெட் கவுன்டர்களிலோ முன்பதிவு செய்யலாம் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.
ராஜ்
மாணவர்களின் மேற்படிப்புக்காக வங்கிக் கடன் முகாம்!
தொடரும் தேயிலை விவசாயிகளின் போராட்டம்!