குரூப் 1 தேர்வு முடிவு எப்போது?

தமிழகம்

குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

92 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காகக் கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி குரூப் 1 முதல் நிலைத் தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்தியது.

இதை 1.90 லட்சம் பேர் எழுதினர். குரூப் 2 முதன்மை தேர்வை கடந்த டிசம்பர் மாதம் நடத்தியது.

குரூப் 7, குரூப் 8 தேர்வை நவம்பர் மாதம் நடத்தியது.

இந்நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி இன்று (ஏப்ரல் 18) வெளியிட்டுள்ளது.

குரூப் 1 முதல்நிலை தேர்வு, குரூப் 8, குரூப் 7-பி தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியாகும் என்றும், 5446 பணியிடங்களுக்கான குரூப் 2 பதவிக்கு நடந்த முதன்மை தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

பிரியா

தோனிக்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டாம்: சேவாக் அறிவுரை!

ஐஎன்எக்ஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *