புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த இந்த கோதுமை ரவா பொங்கல் வீக் எண்ட் விருந்தாக செய்து சுவைக்கலாம். இந்தப் பொங்கல் செரிமானக் கோளாறைச் சரி செய்யும். இதில் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் நிறைந்துள்ளது. எச்சில் சுரப்பை அதிகரிக்கும். ஈறுகளை உறுதியாக்கும். உடல் சோர்வை நீக்கும்.
என்ன தேவை?
கோதுமை ரவை – 200 கிராம்
பாசிப் பருப்பு – 50 கிராம்
சீரகம் – ஒன்றரை டீஸ்பூன்
மிளகு – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
நெய் – 3 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி – தலா 25 கிராம்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பாசிப்பருப்பை நன்கு குழைய வேகவைத்து எடுக்கவும். குக்கரில் நெய், எண்ணெய்விட்டு சீரகம், மிளகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதித்ததும் கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, பருப்பு, கோதுமை ரவையைச் சேர்த்து மூடி, 2 விசில் விட்டு இறக்கினால், கோதுமை ரவை பொங்கல் ரெடி.
கிச்சன் கீர்த்தனா: காளான் புலாவ்
கிச்சன் கீர்த்தனா: சென்னா ரைஸ்