பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு எந்தவிதமாத உணவைச் செய்துகொடுத்து மகிழ்விக்கலாம் என யோசிப்பவர்களுக்கு இந்த கோதுமை ரவை இட்லி ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
கோதுமை ரவை – 2 கப் (சிறு ரவையாக இருத்தல் வேண்டும்)
தயிர் – ஒரு கப்
நெய் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் – ஒன்று
பொடியாக நறுக்கிய இஞ்சி, மல்லித்தழை, கறிவேப்பிலை – தலா சிறிதளவு
உப்பு – சுவைக்கேற்ப
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
வெறும் வாணலியில் கோதுமை ரவையை சிவக்க வறுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அதே வாணலியில் நெய், எண்ணெய் இரண்டையும் ஊற்றி கடுகு தாளித்து பின்னர் அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, மல்லித்தழை, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் இவற்றை வதக்கி, பிறகு கோதுமை ரவையை போட்டு லேசாக வறுத்து, தயிரில் போட்டு, உப்பையும் போட்டு கலக்கவும். தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து அரை மணி நேரம் வரை வைக்கவும். பிறகு இட்லிகளாக வார்த்து எடுக்கவும்.