கிச்சன் கீர்த்தனா: கோதுமை உசிலி

தமிழகம்

விருந்துகளிலும், விசேஷ நாட்களிலும் இடம்பிடித்து விடும் முக்கிய உணவு வகை உசிலி. அவை பெருமபாலும் காய்கறிகளுடன் சேர்ந்த கலவையாகவே இருக்கும். அதிலிருந்து மாறுபட்டது இந்த கோதுமை உசிலி. சத்தான இதை நீங்களும் செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்தலாம். 

என்ன தேவை?

கோதுமை மாவு – ஒரு கப்
அரிசி மாவு – 3 டீஸ்பூன்
முழு உளுந்து – ஒரு கப்
கடலைப்பருப்பு – முக்கால் கப்
பச்சை மிளகாய் – 4
கறிவேப்பிலை – சிறிது
கடுகு – அரை டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கோதுமை மாவு, அரிசி மாவு இரண்டையும் தண்ணீர் தெளித்து உப்பு சேர்த்துப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.

உளுந்து மற்றும் கடலைப் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து ஆவியில் வேக வைக்கவும்.

ஆறியவுடன் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி, எடுக்கவும். வாணலியில் கடுகு தாளித்து பெருங்காயம், கறிவேப்பிலை, அரைத்த பருப்புக் கலவை, வேக வைத்த மாவு உருண்டைகள் அனைத்தையும் வதக்கி எடுத்தால், சுவையான கோதுமை உசிலி தயார்.

உளுத்தம் சுவாலை!

பருத்தித்துறை வடை!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *