what wrong on fact checking team formed

உண்மை சரிபார்ப்பு குழு அமைத்ததில் என்ன தவறு?: நீதிபதி சரமாரி கேள்வி!

தமிழகம்

”தவறான செய்திகளை கண்டறிய தமிழ்நாடு அரசு உண்மை சரிபார்ப்பு குழு அமைத்தத்தில் என்ன தவறு?” என்று அதிமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இன்று (நவம்பர் 20) கேள்வி எழுப்பியுள்ளார். what wrong on fact checking team formed

சமூக ஊடகங்கள் உள்பட அனைத்து ஊடகங்களிலும் தமிழக அரசு தொடர்பான செய்திகளின் உண்மை தன்மையை சரிபார்க்க உண்மை சரிபார்ப்பு குழுவானது அக்டோபர் 6-ஆம் தேதி அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. உண்மை சரிபார்ப்பு பிரிவின் திட்ட இயக்குனராக ஐயன் கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில், தமிழக அரசு அமைத்துள்ள உண்மை சரிபார்ப்பு குழுவுக்கு எதிராக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் நிர்மல் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அதில், “தமிழக அரசு அமைத்துள்ள உண்மை சரிசார்ப்பு குழுவானது பொதுமக்கள் பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் முயற்சியாகும். ஆளும் கட்சி ஆதரவாளரான ஐயன் கார்த்திகேயனை திட்ட இயக்குனராக அரசு நியமித்துள்ளது.

எனவே தமிழக அரசு அமைத்துள்ள உண்மை சரிபார்ப்பு அரசாணைக்கும் திட்ட இயக்குனராக ஐயன் கார்த்திகேயன் செயல்படவும் தடை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

மாநில அரசின் கையில் ஆபத்தான ஆயுதம்!

இந்த வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு இன்று(நவம்பர் 20) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் நிர்மல்குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ”இது சம்பந்தமாக மத்திய அரசு ஏற்கனவே 2021 ஆம் ஆண்டில் விதிகள் வகுத்துள்ளது. தமிழக அரசு அமைத்துள்ள உண்மை சரி பார்ப்பு குழு, தகவல் தொழில் நுட்ப சட்ட விதிகளுக்கு முரணானது. உண்மை சரிபார்ப்பு குழுவை அமைக்க மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது. இது மாநில அரசின் கையில் உள்ள ஆபத்தான ஆயுதம்” வாதிட்டார்.

கிடுக்குப்பிடி கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி!

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ”பொய்த்தகவல்கள், வதந்திகள் விஷயத்தில் நேரடியாக காவல் துறை நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக, ஒரு குழு, அதனைப் பரிசோதிப்பது நல்லதுதானே! காவல்துறைக்கு உதவத்தானே அமைக்கப்பட்டுள்ளது.

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசு அமைப்புகளுக்கு உதவி செய்ய ஒரு அமைப்பு முறை உருவானால் அதில் என்ன தவறு? இது ஒரு வடிகட்டல் முறை தானே தவிர தணிக்கை முறை அல்ல.

ஒரு பொய்த்தகவல் பிரசுரமாகிவிட்டால், மாநில அரசுத்துறைகளால் நடவடிக்கை எடுக்க முடியுமா? முடியாதா? அதைச்சொல்லுங்கள்” என்று அடுத்தடுத்து தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு நிர்மல் குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”முடியும்” என்று பதிலளித்தார்.

அரசு தரப்பு வாதம்!

தொடர்ந்து அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக தவறான தகவல்கள் பரவியதை சுட்டிக்காட்டி, உண்மை சரிபார்ப்பு குழுவில் தகுதியான நபரை தான் நியமித்துள்ளதாக கூறினார்.

ஏற்கெனவே மத்திய அரசு நியமித்துள்ள உண்மை சரிபார்ப்பு குழுவை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. what wrong on fact checking team formed

அதனை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, அந்த வழக்கின் முடிவை தெரிந்து கொள்ளவேண்டும் என்று கூறி, அதிமுக தரப்பில் நிர்மல்குமார் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை டிசம்பர் 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணைக்கு ஒப்புதல்: உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தகவல்!

ஓடிடியில் வெளியாகவுள்ள ‘லியோ’.. எப்போது? எந்த தளத்தில்?

 

+1
0
+1
2
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *