ஆதார் அட்டையை செப்டம்பர் 14 தேதி வரை மட்டுமே புதுப்பிக்க முடியும். அதன்பிறகு செயல் இழந்து விடும் என்பது வதந்தி என ஆதார் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய நாட்டின் முக்கிய அடையாள ஆவணமாக ஆதார் உள்ளது. இந்த நிலையில், ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது ஆதாரை புதுப்பித்து கொள்ள வேண்டும் என்று ஆதார் ஆணையம் அறிவுறுத்துகிறது.
அதன்படி அதனை புதுக்கப்பிக்க நாளை மறுநாள் (செப்டம்பர் 14) வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஆதார் அட்டையை புதுப்பிக்க தவறினால் 14ஆம் தேதிக்கு பிறகு செயல் இழந்துவிடும் என தகவல் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் தபால் நிலையம், இ- சேவை மையம் மற்றும் ஆதார் மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 50 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் தங்கள் ஆதார் அட்டையினை புதுப்பித்துக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து ஆதார் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், “ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது ஆதாரை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அப்படி புதுப்பிக்காவிட்டாலும் அட்டை செயல்பாட்டில்தான் இருக்கும். சேவைகள் எதுவும் பாதிக்காது.
வருகிற 14ம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற தவறான வதந்தியை சிலர் பரப்பியுள்ளனர். இதை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.
இந்த சேவைக்கு செப்டம்பர் 14ம் தேதிக்கு பிறகு புதுப்பித்தால் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். இதனை பலர் தவறாக புரிந்து கொண்டு, 14ம் தேதிக்குள் ஆதாரை புதுப்பிக்க வேண்டும், இல்லையெனில் ரத்தாகிவிடும் என்று தவறான தகவலை பரப்பி வருகின்றனர்
பொதுமக்களே நேரடியாக ஆதார் இணையதளத்தில் முகவரியை உறுதி செய்யும் ஆவணங்களை பதிவேற்றினால் அதற்கு கட்டணம் கிடையாது. இலவசமாக முகவரி மாற்றத்தைப் பதிவு செய்யலாம்” என்று ஆதார் ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”சினிமாவில் தோற்றால் பேராசிரியராக வாழ்வேன்” : ஹிப்ஹாப் ஆதி
கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் ரூ.500 கோடி ஒப்பந்தம் கையெழுத்தானது!