புதுச்சேரியில் உள்ள மணக்குள வினாயகர் கோயில் யானை லட்சுமி, நவம்பர் 30ஆம் தேதி காலையில் சாலையில் நடைப்பயிற்சி செய்த போது மயங்கி விழுந்து இறந்தது.
கோயில் யானை லட்சுமியின் இறப்பில் யானை லட்சுமிக்கு சுகரும் இல்லை; பிபியும் இல்லை! தீயசக்தியின் நாசவேலையா? என்ற தலைப்பில் மின்னம்பலம்.காம் -ல் செய்தி வெளியிட்டிருந்தோம்,
இந்நிலையில் லட்சுமி திடீர் மரணத்தைப் பற்றியும் அது கடைசியாக சாப்பிட்டது என்ன என்பது பற்றியும் கோயில் ஊழியர்களிடம் கேட்டோம்.
இது குறித்து கோயில் ஊழியர்கள் கூறியதாவது: ரூரல் எஸ் பி ரவிக்குமாரும் அவரது மனைவியும் தினந்தோறும் பழம் கொடுத்து வருவார்கள், சிலகாலம் காமராஜர் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி கல்லூரி வளாகத்தில் இருந்து வந்த போதும் தவறாமல் தேடிப் போய் பழம் கொடுத்து வருவார்கள்.
கடைசியாக நவம்பர் 29 -ஆம் தேதி காலையில் எஸ்.பி ரவிக்குமார் மனைவி ஆறு வாழைப்பழம் கொடுத்தார், அன்று மதியம் எஸ் .பி ரவிக்குமார் 2 பழம் கொடுத்துள்ளார்.
அன்று இரவு பாகன் சக்திவேல் ஆறு மாதுளை பழம் கொடுத்துள்ளார், அவ்வளவுதான் மற்றபடி எதுவும் சாப்பிட முடியவில்லை லட்சுமியால்.

நவம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து வெளியில் வராமல் கோயிலிலே ஒரே இடத்தில் இருந்தது அதனால், பால் மடிபோல் வயிறு பகுதியில் நீர் தேங்கி இருந்தது, சாப்பாடு ஏதும் சாப்பிடாமல் இருந்துவந்தது பல நாட்கள், மிகவும் பிடித்தவர்கள் கொடுப்பதில் அதிகபட்சம் ஆறு வாழைப்பழம் அல்லது மாதுளை பழம் சாப்பிடும்.
அப்படியிருந்த யானைக்கு சரியான ட்ரீட் மென்ட் கொடுக்காமல் 15 நாளுக்கு பிறகு திடீரென நடைப்பயிற்சிக்கு அழைத்து வந்ததும் தன்னால் முடியாமல் சாலையிலேயே மயங்கி விழுந்து இறந்து விட்டது என்று தேம்பி தேம்பி அழுது விட்டார்கள்.
வணங்காமுடி
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்!
கார்த்திகை தீபம் : திருவண்ணாமலையில் மக்கள் கடல்!