உரிமைத் தொகை நிராகரிக்கப்பட்டாலும் பணம் பெறலாம்: எப்படி?

Published On:

| By christopher

what to do magali urimai thogai application rejected

மகளிர் உரிமைத் தொகை நிராகரிக்கப்பட்டதாக மெசேஜ் வந்தாலும் மேல்முறையீடு செய்து தீர்வு பெறலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

திமுகவின் தேர்தல் வாக்குறுதியான பெண்களுக்கு மாதம் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டன. அதன்மூலம் இதுவரை ஒரு கோடியே 64 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் ஏற்கெனவே உள்ள தரவுகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டு வருகின்றன. வரும் செப்டம்பர் 5ஆம் தேதிக்குள்  இந்த அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு விண்ணப்பதாரர்களை இறுதி செய்ய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்பின்னர் விண்ணப்பங்களின் நிலை குறித்து சம்பந்தப்பட்ட மகளிரின் கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பி வைக்கப்படும்.

ஒருவேளை உரிமை தொகை நிராகரிக்கப்பட்டதாக மெசேஜ் வந்தாலும், விண்ணப்பதாரர்கள் இதுகுறித்து மாவட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்து தீர்வு பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதனைத்தொடர்ந்து வரும் 15ஆம் தேதி இந்த திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

அன்றிலிருந்து அடுத்த 5 நாட்களில் அதாவது செப்டம்பர் 20ம் தேதிக்குள் முதல் உரிமைத் தொகை சம்பந்தப்பட்ட பெண்ணின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

இந்தியா கூட்டணி: ஒருங்கிணைப்பாளர் குழுவில் ஸ்டாலின்

ரஜினிக்கு கலாநிதி கொடுத்த BMW x7: எத்தனை கோடி தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share