இன்று நாம் நமக்குப் பிடித்த உணவை உண்கிறோம். ஆனால், அதை சரியான முறையில், சரியான நேரத்தில் சாப்பிடுகிறோமா என்பதே பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. இந்த நிலையில் எந்த நேரத்தில் எப்படிப்பட்ட உணவைச் சாப்பிட வேண்டும் என்று விளக்குகிறார்கள் சித்த மருத்துவர்கள்.
“காலை நேரத்தில், எளிதில் செரிமானமாகி உடலுக்கு நன்கு சக்தி அளிக்கக்கூடிய மிதமான உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.
இட்லி, கஞ்சி வகைகள், நீராகாரம், ஆவியில் வேகவைத்த உணவுகள் சிறந்தவை.
புளிப்புச் சுவையுடைய ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களைத் தவிர மற்ற பழங்களை காலையில் எடுத்துக்கொள்ளலாம்.
ஏனெனில் புளிப்புச் சுவையுடைய பழங்களில் அமிலத்தன்மை அதிகமாக இருப்பதால் அவை வயிற்றுப்புண்ணை உண்டு பண்ணும் வாய்ப்புண்டு.
அல்சர் இருப்பவர்கள் வாழைப்பழம், இளநீர், டீ மற்றும் காஃபி ஆகியவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
மதிய உணவு என்பது இனிப்பு, பழங்கள், காய்கறிகள், பருப்பு சாம்பார், ரசம் மற்றும் மோர் என்ற வரிசையில், நிறைவான உணவாக இருப்பது அவசியம்.
இரவு உணவும் காலை உணவைப்போல எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவாக இருக்க வேண்டும்.
உணவுக்குப் பின் சிறிய நடைப்பயிற்சி சிறந்தது. இரவு உணவுக்குப் பின் டீ, காபி போன்ற பானங்களைத் தவிர்ப்பது நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தை தரும்.
உணவு உட்கொள்ளும் அரை மணி நேரம் முன்பு டீ அல்லது காபி போன்ற எந்த ஒரு பானத்தையும் அருந்தக் கூடாது. அதேபோல், உணவு அருந்திய பின் ஒரு மணி நேரம் இடைவெளி விட்ட பிறகு இது போன்ற பானங்களை அருந்த வேண்டும்.
இன்று பலர் அறுசுவைகளில் கசப்பு மற்றும் துவர்ப்பு சுவையுடைய உணவுகளை உண்பதில்லை. இது முற்றிலும் தவறு. அவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உணவை நன்கு மென்று, கூழாக்கி உமிழ்நீருடன் சேர்த்து விழுங்க வேண்டும். உணவு உண்ணும்போது இடையிடையே தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கவும்.
விருப்பமான உணவாக இருந்தாலும், வயிறு நிறைய உண்ணாமல் முக்கால் வயிறு அளவுக்கு உண்பதே நலம்” என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மன்னராட்சியா? மக்களாட்சியா? : அப்டேட் குமாரு
தீபத் திருவிழா : திருவண்ணாமலையில் 156 பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை!
விழுப்புரம் : வெள்ளம் வடிந்தும், வடியாத சாதி பூசல்!
கெட்டுப்போன நிவாரண அரிசியை சாலையில் கொட்டிய மக்கள்!
நெல்லை மாநகராட்சி உதவி ஆணையர்… நியமனம் பெற்ற 10 நாட்களில் பணியிடை நீக்கம்!