தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாகப் பேசப்படும் விஷயம் தயாரிப்பாளர் ரவீந்திரன் – மகாலட்சுமி திருமணமும், அதற்காக வனிதா விஜயகுமார் போட்ட ட்வீட்டும் தான்.
பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளாக இருந்தாலும், சினிமாவில் ஹீரோயினாக நடித்திருந்தாலும், 2020 ஆம் ஆண்டு நடந்த பிக்பாஸ் சீசன் 3 மூலம் தான் வனிதா பிரபலமானார்.
குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலும் அவர் வெற்றியாளரானார். சர்ச்சையான பேச்சால் 2020 ல் சமூக வலைதளங்களை பெரும்பாலும் ஆக்கிரமித்திருந்தார் வனிதா. ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவரான வனிதா, ஊரடங்கின் போது மூன்றாவதாக பீட்டர் பாலை வீட்டிலேயே திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணமும் விவாதத்துக்குள்ளானது.
பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத்திடம் விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டது சட்டப்படி செல்லாது என பலரும் வனிதா – பீட்டர் பாலுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.
இதில் குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியை யூடியூப்பில் விமர்சனம் செய்து வந்தவரும் தயாரிப்பாளருமான ரவீந்திரன் தொடர்ந்து வனிதா திருமணம் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்து வந்தார்.
“வனிதா யாரை வேண்டுமாலும் திருமணம் செய்யட்டும். ஆனால் முதல் மனைவியிடம் விவாகரத்து பெறாமல் பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டது சட்டப்படி குற்றம்” என்று பீட்டர் பாலின் மனைவிக்கு ஆதரவாகப் பேசினார்.
இதனால் கோபமடைந்த வனிதா, ‘என் விஷயத்தை பேச நீங்கள் யார்’ என்றும் எலிசபெத்துக்கும் உங்களுக்கும் என சம்பந்தம் என்றும் ரவீந்திரனுக்கு ஆடியோ மெசேஜ் அனுப்பி திட்டியிருந்தார்.

‘கவினை வைத்து 4 கோடியில் படமெடுத்து பிரபலமாக முடியாமல் என்னை பற்றி பேசி பிரபலமாக முயற்சிக்கிறார். எனக்கு வெறும் 40,000 தருவாரா? என் பிள்ளைகளை ரவீந்திரன் படிக்க வைப்பாரா என்று ஆடியோ மெசேஜ்களை ரவீந்திரனுக்கு அனுப்பி இருந்தார். மேலும் ரவீந்திரன் மீது போலீசில் புகார் அளித்ததாகவும் கூறினார்.
இதற்கு பதிலளித்த ரவீந்திரன், நான் நீங்கள் கேட்ட பணத்தையும் தந்து உங்க பசங்களையும் படிக்க வைக்கிறேன். ஆனால் வனிதா இதையெல்லாம் மீடியா முன் கூற வேண்டும். என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பேசினார். என் மீது போலீசில் புகார் தந்தால் வேறு ஒருவரின் கணவனை திருமணம் செய்ததற்காக வனிதாவும் ஜெயிலுக்கு போக வேண்டியிருக்கும் என்று ரவீந்திரன் பதிலடி கொடுத்தார்,
அதேபோன்று வனிதாவுக்கும், பீட்டர்பாலுக்கும் சண்டை நடந்து அவர்கள் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானபோதும் கூட ரவீந்திரன் முதல் ஆளாக, வீட்டில் இருந்து துரத்தப்பட்டார் பீட்டர்பால் என்று பதிவிட்டு இருந்தார். இப்படியாக வனிதாவுக்கும் ரவீந்திரனுக்கும் இடையே ஒரு மோதல் போக்கு இருந்து வந்தது.
இந்நிலையில் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட ரவீந்திரன், ஒரு பேட்டியில் வனிதா அக்காவுக்கும் எனக்கும் பிரச்சினை தீர்ந்துவிட்டது. அவரது சொந்த வாழ்க்கை பற்றி எனக்கு எந்த கருத்தும் இல்லை,
விவகாரத்து செய்யாத ஒருவரை திருமணம் செய்தது பற்றி தான் நான் கருத்து கூறியிருந்தேன். எனக்கு திருமணம் ஆனது தெரிந்தால் வனிதா அக்கா நிச்சயம் வாழ்த்து தெரிவிப்பார் என்று கூறியிருந்தார்.

ஆனால் தற்போது கதையே வேறு மாதிரி ஆகிவிட்டது. வனிதா விஜயகுமார் போட்ட பதிவு, அவர்கள் இருவருக்கும் இன்னும் மனக்கசப்பு இருப்பதை காட்டியிருக்கிறது.
மற்றவர் வாழ்க்கையை கவனிக்க முடியாத அளவுக்கு நான் பிசியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். கர்மா செய்ததை திருப்பி கொடுக்கும் என்று பதிவிட்டு ரவீந்திரன் மீதுள்ள தனது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் வனிதா.
ரவீந்தர் மகாலட்சுமி திருமணம்: வனிதாவின் மறைமுக கருத்து!