சென்னைக்கு புதுசா நீங்க: இனி கவலையே இல்லை!

தமிழகம்

ஜி.பி.எஸ். வசதியைப் பயன்படுத்தி சென்னை மாநகர பேருந்துகளில் அடுத்த பேருந்து நிறுத்தம் குறித்து ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் பேருந்துகளில் புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பான் மூலம் பேருந்து நிறுத்தங்களின் பெயர்களை பொதுமக்கள் முன்னரே அறிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 150 பேருந்துகளில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் முன்னிலையில் திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இந்த சேவையை இன்று (நவம்பர் 26) தொடங்கி வைத்தார்.

What is the next bus stop Loudspeaker Notification in chennai bus

இப்பேருந்துகளின் உட்புறத்தில் ஜிபிஎஸ் உதவியுடன் பொருத்தப்பட்டுள்ள 6 ஒலிபெருக்கிகள் மூலம் பேருந்து நிறுத்தத்தை அடைவதற்கு 100 மீட்டருக்கு முன்பாக நிறுத்தத்தின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலிபரப்பப்படும்.

இடை இடையே விளம்பரங்கள் ஒலிபரப்பப்பட்டு அதன் மூலம் போக்குவரத்துத்துறைக்கு வருவாய் ஈட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் 602 வழித்தடங்களில் 3,100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், முதற்கட்டமாக 500 மாநகர பேருந்துகளில் ஒலிபெருக்கிகள் பொருத்த ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது.

அவற்றில் 150 பேருந்துகளில் பணி முடிந்த நிலையில், பேருந்து நிறுத்த தகவலை பயணிகளுக்கு வழங்கும் வகையில் புதிய வசதியுடன் இன்று முதல் அப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும் சென்னை மாநகரின் 1000 பேருந்துகளில் ஒலிபெருக்கிகள்  பொருத்துவதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரும் பணி நிறைவடைய உள்ளது என்றும் போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சேவையால், பேருந்துகளில் பயணிக்கும் பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள்  பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், பிறகு அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் சிவசங்கர் ஆகியோருடன் இணைந்து சென்னை மாநகர் பேருந்தில் பயணம் செய்தார்.

What is the next bus stop Loudspeaker Notification in chennai bus

பேருந்து சேவையை தொடங்கி வைத்து பல்லவன் இல்லத்திலிருந்து பாரிமுனை , அண்ணா சதுக்கம் வரை 15 நிமிடங்கள் பேருந்தில் பயணம் செய்த உதயநிதி ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் .

அப்போது பேசிய அவர், வெளியூர்களிலிருந்து சென்னைக்கு வரக்கூடிய பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீண்ட காலத்திற்குப் பிறகு பேருந்து பயணம் மகிழ்ச்சி அளிப்பதாகவும் உதயநிதி குறிப்பிட்டார்.

மேலும் இந்த தானியங்கி அறிவிப்பான் சேவையை அனைத்து அரசு பேருந்துகளிலும் கொண்டுவர, போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுக்கும் என குறிப்பிட்டார்.

கலை.ரா

இந்தி திணிப்பு: தீக்குளித்து முதியவர் உயிரிழப்பு!

காந்தாரா பாடல் தடை நீக்கம்: நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *