What happens if drink coconut water everyday

சம்மர் ஸ்பெஷல் ஹெல்த் டிப்ஸ்: தினமும் இளநீர் பருகுவது ஆபத்தா?

தமிழகம்

கோடை தொடங்க நிலையில் பலரால் விரும்பப்படுவது இளநீர்… இயற்கையின் கொடையாக நமக்குக் கிடைக்கும் இளநீரை அனைத்துத் தரப்பினரும் தினமும் பருகலாமா? யாரெல்லாம் பருகக் கூடாது? ஊட்டச்சத்து ஆலோசகர்கள் சொல்வது என்ன?

வெப்ப மண்டலப் பகுதியில் வசிப்பவர்களுக்கு இளநீர் சிறந்த உணவு. எவ்வித நோய் பாதிப்புகளும் இல்லாதவர்கள், தினமும் ஓர் இளநீர் குடிக்கலாம்.

தினமும் இரண்டு அல்லது அதற்கு மேல் இளநீர் பருகினால், பசி உணர்வு தள்ளிப்போகும். இதனால், உணவைத் தவிர்க்க நேரிடும் என்பதால், இதன் மூலம் உடலுக்குத் தேவையான மற்ற ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.

காலை நேரத்தில் உடற்பயிற்சிக்குச் செல்லும் முன்னர், பின்னர் நீர் வறட்சியால் தாகம் மற்றும் பசி ஏற்படும். அவர்கள் இளநீர் பருகுவது சிறந்தது.

சாதாரண அறை வெப்பநிலையில் (Room Temperature) வைக்கப்பட்ட இளநீர் சீக்கிரமே புளித்துவிடும். அத்தகைய இளநீரைக் கொண்டு குளிர்ப்பிரதேசங்களில் பல்வேறு உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. அரிசி மாவு, ஆப்பம் உட்பட பல்வேறு உணவுப் பொருள்கள் தயாரிப்பிலும் இளநீரைப் பயன்படுத்தலாம். இதனால், உணவின் சுவையுடன் சத்தும் கூடும்.

தேங்காய் இல்லாத (வழுக்கை) இளநீர் கொஞ்சம் உவர்ப்புத்தன்மையுடன் இருக்கும். சர்க்கரை நோயாளிகள், இந்த வகையில் தினமும் ஓர் இளநீரை பருகலாம். இதுவே, தேங்காய் உள்ள இளநீராக இருந்தால், வாரத்துக்கு ஒன்று மட்டும்தான் சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நம் உடலில் பொட்டாசியம் அளவானது 5.1 அளவுக்குள் இருக்க வேண்டும். இந்த அளவு 4.8-க்கு அதிகமாக இருப்பவர்கள் அடிக்கடி இளநீர் குடிக்கக் கூடாது.

இதய மற்றும் சிறுநீரக பாதிப்புகளுடன் இருப்பவர்களுக்கு பொட்டாசியம் சத்து அதிகம் இருக்க வாய்ப்புள்ளது. இவர்களும் அடிக்கடி இளநீர் பருகுவதைத் தவிர்க்க வேண்டும். ஃப்ரிட்ஜில் சேகரித்து வைத்தும், பாக்கெட்டில் அடைத்துப் பதப்படுத்தப்பட்ட இளநீரையும் தவிர்க்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்.. சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது?

பியூட்டி டிப்ஸ்: அழகான மெஹந்தியைப் பெற இதைச் செய்யுங்க!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சொர்க்கலோக எடிஷன் இருக்கா என்ன? : அப்டேட் குமாரு

+1
0
+1
1
+1
0
+1
4
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *