பன்னீரிடம் என்ன பேசினார் மோடி?

தமிழகம்

பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வைத்து இன்று (ஜூலை 29) பன்னீர் செல்வம் சந்தித்தார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழா மற்றும் சென்னை அண்ணா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க 2 நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்தார் பிரதமர் மோடி. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பு திட்டமிட்டது.

அதன்படி நேற்று மாலை சென்னை வந்த பிரதமரை, விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர்களுடன் சேர்ந்து வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் இன்று காலை பங்கேற்றுவிட்டு டெல்லி புறப்பட சென்னை பழைய விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வந்தார்.

அங்கு நடைபெற்ற வழியனுப்பும் நிகழ்ச்சியில் ஓபிஎஸ் கலந்துகொண்டு பிரதமரை சந்தித்து பேசியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, தனது உடல்நிலை குறித்து மட்டுமே பிரதமர் மோடி கேட்டதாக ஓபிஎஸ் பதில் அளித்துள்ளார்.

கட்சி தலைமையை கைப்பற்ற ஓபிஎஸ், ஈபிஎஸ் இருதரப்புக்கும் இடையே உட்கட்சி மோதல் நிலவுகிறது. இருவரும் கட்சி தலைமை பதவிக் குறித்து பேசவே அவரை பார்க்க சென்றனர். ஆனால் அதுகுறித்து பேசாமல் பிரதமர் மோடி சென்றதால் இருதரப்பும் கவலை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

+1
0
+1
3
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *