qualification to get monthly assistance scheme

மகளிர் உரிமை தொகை ரூ.1000: யாருக்கு உண்டு? யாருக்கு கிடையாது?

தமிழகம்

குடும்பத் தலைவிகள் கலைஞர் உரிமைத் தொகையை பெறுவதற்கான தகுதிகளைத் தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 7) வெளியிட்டுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ளது.

இந்நிலையில் கலைஞர் உரிமைத் தொகை பெறுவதற்கான தகுதிகளைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

யாருக்கு உரிமை தொகை உண்டு

ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு உரிமை தொகை உண்டு.

5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்திருப்பவர்கள் உரிமை பெறுவதற்குத் தகுதியுடையவர்கள்.

ஆண்டிற்கு வீட்டு உயோகத்திற்கு 3,600 யூனிட்டிற்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பத்திற்கு உரிமை தொகை உண்டு.

உரிமை தொகை பெற தகுதியுடைய குடும்ப தலைவிகள் யார்?

குடும்பத் தலைவிக்கான வரையறை என்னவென்றால், ஒரு குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைவருமே ஒரே குடும்பமாக கருதப்படுவர். குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் பெண் குடும்பத் தலைவியாக கருதப்படுவார். குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராக குறிப்பிடப்பட்டிருந்தால், அவரது மனைவி குடும்பத் தலைவியாக கருதப்படுவார்.

திருமணமாகாத பெண்கள், கைம்பெண்கள், திருநங்கைகள் தலைமையில் குடும்பம் செயல்பட்டு வந்தால் அவர்கள் குடும்பத் தலைவிகளாக கருதப்படுவார்கள்.

ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், அவர்களில் யாரேனும் ஒருவர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கு கிடையாது

குடும்பத்தில் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டி வருமான வரியும் தொழில் வரியும் செலுத்துபவர்களுக்கு உரிமை தொகை கிடையாது.

மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்பு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு உரிமை தொகை கிடையாது.

சொந்த பயன்பாட்டிற்காக கார், ஜீப், டிராக்டர் அல்லது கனரக வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு உரிமை தொகை கிடையாது. ஆண்டிற்கு ரூ.50 லட்சத்திற்கு மேல் வியாபாரம் செய்து சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துபவர்களுக்கு உரிமை தொகை கிடையாது.

ஊராட்சிமன்ற வார்டு உறுப்பினர்களை தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிமை தொகை கிடையாது.

முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய ஓய்வூதியம் பெற கூடியவர்கள், சமூகப் பாதுகாப்பு திட்டம் ஓய்வூதியம் மற்றும் அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்களுக்கு உரிமை தொகை கிடையாது.

மோனிஷா

பிரதமர் தலையீடு: ஓய்வு அறிவிப்பை வாபஸ் பெற்ற கேப்டன்!

காவல்துறை மரியாதையுடன் டிஐஜி விஜயகுமார் உடல் தகனம்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *