தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் 5 இருபது ஓவர் (டி20) போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடரில் முதல் இரு ஆட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 4 வது டி 20 ஓவர் போட்டி இன்று (ஆகஸ்ட் 12) இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் ரோவ்மேன் போவெல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும், தொடரை இழக்க கூடாது என்ற நோக்கில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணியும் களமிறங்க உள்ளன.
அதன்படி, இந்த தொடர் முழுவதும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சுப்மன் கில் சொதப்பி வருவதால் இன்றைய போட்டியில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இதைப்போன்ற அறிமுக வீரராக களம் இறங்கும் ஜெய்ஸ்வால், ஆர்ஸ்தீப் சிங் மற்றும் முகேஷ் குமாரும் டி20 கிரிக்கெட்டில் எதிர்பார்த்த அளவு செயல்படவில்லை.
மேலும் அக்சர் பட்டேலும் பேட்டிங்கில் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார். சஞ்சு சாம்சனும் தனக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே டி20 கிரிக்கெட் போட்டியில் இடம் கிடைக்கும்.
இப்படி இந்திய அணிக்கு பல பிரச்சனைகள் இருக்கும் சூழலில் இன்றைய போட்டி நடைபெற இருப்பதால் என்ன செய்யப்போகிறது இந்திய அணி என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களின் மூலம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை!
நாங்குநேரி சம்பவம்: மேலும் ஒரு மாணவர் கைது!