நல வாரியம்:முதல்வரை சந்தித்த உணவு டெலிவரி தொழிலாளர்கள்!

தமிழகம்
உணவு விநியோகம் உள்ளிட்ட டெலிவரி தொழில்களை செய்து வரும் ‘கிக்’ எனப்படும் அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க தனி நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தொழிலாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சுதந்திர தின விழா உரையில், “சென்னை போன்ற பெருநகரங்களில் தொடங்கி, பல்வேறு நகரங்களிலும் இன்று நாம் அடிக்கடி காணக்கூடிய காட்சி ஒன்று. ஓலா, ஊபர், ஸ்விகி, ஸொமட்டோ போன்ற நிறுவனங்களைச் சார்ந்த வாகனங்கள் விரைவாக சேவை வழங்கும் நோக்கத்துடன் பயணிப்பதைக் காணலாம்.

நேரத்தின் அருமை கருதி பணிபுரியும் இத்தகைய பணியாளர்களின் வாழ்க்கை முக்கியமானது. அவர்களின் ஒட்டுமொத்த நலனைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கென தனியே நல வாரியம் ஒன்று அமைக்கப்படும்” என்று அறிவித்தார்.

அந்த வகையில், இணைய வழி சேவை நிறுவனங்களில் பணிபுரியும் உணவு விநியோகம் மற்றும் சேவைப் பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களான ‘கிக்’ (Gig) தொழிலாளர்களின் ஒட்டுமொத்த நலனை பாதுகாக்கும் வகையில் தனியே நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டதற்காக இணைய வழி சேவை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, முதன்மைச் செயலாளர்/தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ராஜ்
+1
0
+1
0
+1
0
+1
6
+1
0
+1
1
+1
0

2 thoughts on “நல வாரியம்:முதல்வரை சந்தித்த உணவு டெலிவரி தொழிலாளர்கள்!

  1. Yes rapido service very high amount commission plus GST 20 present commission 30 present pls neenga etha paaru ka sir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *