அக்.25 வரை சிறப்புப் பேருந்துகள் இயங்கும்!

Published On:

| By Monisha

Weekend Special buses will run till Wednesday

சொந்த ஊர் சென்றோர், மீண்டும் திரும்பும் வகையில் நாளை (அக்டோபர் 25) புதன்கிழமை வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

வார விடுமுறை மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி, சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டது.

இந்த நிலையில், சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் மீண்டும் திரும்பும் வகையில் புதன்கிழமை வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து ஏறக்குறைய 5 லட்சம் பயணிகள் சிறப்புப் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், சென்னை திரும்புவோருக்காக பல்வேறு ஊர்களிலிருந்து 8,000 பேருந்துகள் வரை இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

ராஜ்

கிச்சன் கீர்த்தனா: முருங்கைக் கீரை வேர்க்கடலை துவட்டல்

டிஜிட்டல் திண்ணை: சிக்னல் கொடுத்த ஸ்டாலின்… அமர் பிரசாத் மீது பாயும் குண்டாஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share