தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வானிலை குறித்த 4 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என்றும் டிசம்பர் 5-ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், வெதர்மேன் பிரதீப் ஜான் தமிழ்நாடு வானிலை குறித்த 4 அறிவிப்புகளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், நவம்பர் 27 முதல் 29 வரை தமிழகத்தில் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் நல்ல மழை பொழிந்துள்ளது. இன்று முதல் மழைப்பொழிவு குறைய ஆரம்பிக்கும்.

டிசம்பர் 1 முதல் 4 வரை தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், தெற்கு, மேற்கு மற்றும் உள் மாவட்டங்களில் மழை பெய்யும்.
டிசம்பர் 8 முதல் 12 வரை காற்றழுத்த தாழ்வு பகுதி இந்தியாவின் வங்க கடலை கடக்கிறதா? அல்லது சீனாவில் இருந்து கொண்டே இந்தியா பக்கம் வராமல் இருக்குமா? இது தமிழகத்திற்கு நிறைய மழையை கொடுக்குமா? என்ற கேள்விகளுக்கு வரும் நாட்களில் தான் பதில் கிடைக்கும்.
Madden–Julian oscillation காரணமாக நவம்பர் 20-25-ல் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலமான 94 பி போல பூட்ட கேஸ் ஆக இல்லாமல் இது புயலாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் பின்னர் தான் அது தெரிய வரும் என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
திமுக கவுன்சிலர் கடத்தியது கோகைன் போதைப்பொருளா? – கடலோர பாதுகாப்பு குழுமம் விளக்கம்
“நான் தயார்… நீங்கள் தயாரா?”: மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி சவால்!