தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த வானிலை அப்டேட்: உருவான புதிய ”சக்கரம்”

தமிழகம்

தமிழ்நாட்டில் இன்றைய வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்கள் வடகிழக்கு பருவமழை காரணமாக, கனமழை பெய்தது. பின்னர், லேசானது முதல் மிதமான மழை ஆங்காங்கே பெய்து வருகிறது.

இந்நிலையில் , தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 28 ) மழை எப்படி இருக்கும் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் அப்டேட் வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யும். கிழக்கு காற்று காரணமாக கடலோர மாவட்டங்களில் சென்னையில் இருந்து நாகப்பட்டினம் வரை டிசம்பர் பாதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் கிழக்கு பெல்ட் முழுக்க லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதாவது ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், நீலகிரி, நாமக்கல் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல் கரூரிலும் கொஞ்சம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தென் தமிழ்நாட்டில் இருக்கும் நெல்லை, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, திண்டுக்கல், குமரி, தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த மழை முழுக்க எல்லா இடங்களிலும் பெய்யாது. ஒரு சில இடங்களில் மட்டும்தான் பெய்யும். டிசம்பர் 2 ஆம் வாரம் புதிய சக்கரம் உருவாக வாய்ப்பு உள்ளது.

இந்தோ – சீனா கடல் பகுதியில் இருந்து இந்த சக்கரம் ஒன்றாக நகர வாய்ப்பு உள்ளது. இது புயலாக மாறும் வாய்ப்புகளும் உள்ளன. இந்த சக்கரம் தாழ்வான உயரத்தில் நகர வாய்ப்புகள் உள்ளன.

இலங்கைக்கு மேலே தாழ்வாக செல்லும் வாய்ப்புகள் உள்ளன. இது தொடர்பாக போகப் போக அப்டேட் வரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல் வெளியிட்டு உள்ளார்.

அதே நேரம் டிசம்பர் 1 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை , காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தனது அழகினை மேம்படுத்திய 5 இந்திய நடிகைகள் இவங்க தானா!

தேசிய அரசுகளும், சுயாட்சி பகுதிகளும்

+1
0
+1
2
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *