தமிழகத்தின் 10 மாவட்டங்களில் நாளை (நவம்பர் 3) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 2) அறிவித்துள்ளது.
சென்னை முழுவதும் இன்று காலை சுமார் 2 மணி நேரம் மழை பெய்ததால் சற்று வெப்பம் தணிந்தது. ஆனால், அதற்குப் பின்பு வெயில் எப்போதும் போல் மக்களை வாட்டி வருகிறது.
இந்த நிலையில்,சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவுவதால்,
இன்று(நவம்பர் 2), நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நவம்பர் 3ஆம் தேதி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
02.11.2024: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
மீண்டும் தாய் வீடு…அஸ்வின் ஆசை நிறைவேறுமா?
“விஜய்யுடன் திருமா கூட்டணி வைக்க மாட்டார்” – சீமான்
ஒரு தேர்தலுக்கு ஆலோசகராக இருந்தால் 100 கோடி…. பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்!