அடுத்த இரு தினங்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் : வானிலை மையம்!

Published On:

| By Minnambalam Login1

weather report today

தமிழ்நாட்டில் வெயில் மீண்டும் மக்களை வாட்டத் தொடங்கியுள்ளது.

பொதுவாக ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் வானிலை சற்று இதமாகத்தான் இருக்கும். ஆனால் இந்த வருடம் முன்பைவிட வெயில் கடுமையாக உள்ளது.

கடந்த சில தினங்களாக மதுரை, சென்னை, வேலூர், சேலம் என சில இடங்களில் வெப்பம் இயல்பை விடச் சற்று அதிகமாக இருந்துவந்தது.

இந்தசூழலில் நேற்று வெயிலின் தாக்கம் குறைந்திருந்த நிலையில்,  இன்று மீண்டும் வெயிலின் அளவு அதிகரித்துள்ளது.

இன்று (செப்டம்பர் 20) சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (செப்டம்பர் 20 மற்றும் 21) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை மதுரை விமான நிலையத்தில் 39.7 ° செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 19.6 ° செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளது.

இன்று மற்றும் நாளை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்திற்குச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்

இன்று முதல் செப்டம்பர் 24 வரை, மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்

இன்று முதல் செப்டமப்ர் 23 வரை, தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்

இன்று, தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மத்தியமேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பேஜர் வெடிப்புக்கு பின்னணியில் வயநாட்டுக்காரர்? அதிர வைக்கும் தகவல்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 15 நபர்கள் மீது குண்டாஸ்!

மாற்றுத்திறனாளி மாணவர்களின் உதவித்தொகை இருமடங்காக உயர்வு: ஸ்டாலின் உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share