weather report tamilnadu

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகம்

தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும்,  உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் மற்றும் வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் நேற்று(நவம்பர் 22) மழை பதிவானது.

அதிகபட்சமாக ராமநாதபுரத்தில் 6 செ.மீ. மழையும் குறைந்தபட்சமாக கொடைக்கானலில் 1 செ.மீ மழையும் பதிவானது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(நவம்பர் 22) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில்,

“22-11-2024 முதல் 24-11-2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

25-11-2024: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தமிழக கடலோரப்பகுதிகள்

22-11-2024: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்

22-11-2024: தென்கிழக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

10 கோடி பஞ்சாயத்து… அருகருகே இருந்தாலும் முகம் நோக்கா மனம்!

ரஜினியுடன் பேசியது என்ன? – சீமான் பதில்!

சனாதன வழக்கு: உதயநிதி நேரில் ஆஜராக விலக்கு தொடரும் – உச்சநீதிமன்றம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0