Weather Report: Increasing temperature... Meteorological Department warned people!

அடுத்த மூன்று நாட்கள்… ஷாக் கொடுத்த வானிலை மையம்!

தமிழகம்

அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் படிப்படியாக அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (மே 28) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில்,

“ தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (மே 28) முதல் ஜூன் 3 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு

இன்று முதல் மே 30ஆம் தேதி வரை அடுத்த 3 நாட்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3 டிகிரி செல்சியஸ் அளவில் படிப்படியாக உயரக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3 டிகிரி செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும்.

அதிகப்பட்ச வெப்பநிலை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

மே 31 மற்றும் ஜூன் 1ஆம் தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சற்று குறைந்து இயல்பை ஒட்டியும், இயல்பை விட சற்று அதிகமாகவும் இருக்கக்கூடும்.

சென்னை, புறநகர் பகுதிகளில் வானிலை முன்னறிவிப்பு:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

இன்று (மே 28) குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35-45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை மற்றும் மே 31ஆம் தேதி வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45-55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று இன்று (மே 28) மணிக்கு 45-55 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று இன்று மணிக்கு 35-45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

தெற்கு கேரளா, லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகள் மற்றுமதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 35-45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உலக பட்டினி தினம் : மூன்றரை லட்சம் பேருக்கு விஜய் கட்சி அன்னதானம்!

போன் போட்ட தலைவர்கள்… வைகோ ஹெல்த்: துரை வைகோ அப்டேட்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *