புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

தமிழகம்

வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் சென்னை மக்களுக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தமிழகப் பகுதிகள் மற்றும் வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது.

இதனால் அணைகள் மற்றும் மற்ற நீர்நிலைகள் நிரம்பி அதன் முழுக் கொள்ளளவை எட்டி வருகிறது.

இதனால் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்குத் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என்று மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னை மக்களுக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 967 கன அடியாக அதிகரித்துள்ளது.

மொத்தம் 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு தற்போது 2536 மில்லியன் கன அடியாக உள்ளது. குடிநீர் தேவைக்காகப் புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 159 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் ஏரிகளுக்கான நீர்வரத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாகவும், நீர்வரத்திற்கேற்ப உபரிநீர் வெளியேற்றுவது முடிவெடுக்கப்படும் எனவும் நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோனிஷா

அக்டோபரில் 730 கோடி முறை யுபிஐ பரிவர்த்தனை!

நேரு பேச்சு: எடப்பாடி ரியாக்ஷன்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *