வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதால் மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக இன்று (நவம்பர் 10) நீர் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் நீரி பிடிப்பு பகுதிகள் நிரம்பி வருகின்றன.
அதன்படி தேனி மாவட்டத்தில் 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்தது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக துணை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்ட மக்களுக்கு இரண்டு கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தொடர்ந்து அணையின் நீர்மட்டத்தை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் (நவம்பர் 8) அணையின் நீர் மட்டம் 69 அடியை எட்டியது. இதனையடுத்து 5 மாவட்ட மக்களுக்கு தற்போது இறுதிக் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வைகை அணையில் 70.50 அடி நீட் மட்டம் உள்ளதால் பாசனத்திற்காக உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து இன்று தண்ணீரை திறந்து வைத்துள்ளனர்.
தற்போது மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 900 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
கோவையில் இன்று ஒரு பள்ளிக்கு மட்டும் விடுமுறை!
ஆறு நாட்கள் என்ன செய்தார் ஸ்டாலின்?