மேட்டூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். இந்த ஆண்டும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் குறுவை சாகுபடிக்காக தண்ணீரை திறந்து விட்டார்.
அணையில் இருந்து நீர் தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருந்ததால் அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தது. குறுவை சாகுபடி அறுவடைக்கு தயாராகி வரும் நிலையில் அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியது.
இதனிடையே டெல்டா பாசனத்திற்காக கர்நாடக அரசு கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய உரிய தண்ணீரை திறந்து விடாமல் தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்நிலையில் மேட்டூர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நீர்வரத்து 2,938 கன அடியில் இருந்து 3,367 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது அணையில் 11.36 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 6,500 கன அடி நீர் திறந்து விடப் படுகிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதாலும் பரவலாக மழை பெய்து வருவதாலும் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மோனிஷா
அதிமுக பெயர், சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை கோரிய வழக்கு இன்று விசாரணை!
வேலைவாய்ப்பு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!