அரசு கேபிள் டிவியில் காணலாம்: கால்பந்து ரசிகர்களுக்கு குட்நியூஸ்!

தமிழகம்

கத்தாரில் நடைபெறும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரைத் தமிழ்நாடு அரசு கேபிள் டிவியில் கட்டணமின்றி பார்க்கலாம் என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

4 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் இந்த ஆண்டு அரபு நாடான கத்தாரில் நவம்பர் 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 32 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி கத்தாரில் உள்ள 5 மைதானங்களில் நடைபெறுகின்றன.

உலகக் கோப்பை ஆரம்பித்த உடனே ரசிகர்கள் தங்களது கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர். ஏராளமான கால்பந்து ரசிகர்கள் நேரடியாக கத்தாருக்கு சென்று போட்டிகளைப் பார்த்து வருகின்றனர்.

நேரடியாகச் செல்ல முடியாத கால்பந்து ரசிகர்களும் தங்களது வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சி மூலமாகவும் மொபைல் போன் மூலமாகவும் நேரலையில் உலகக் கோப்பையைக் கொண்டாடி வருகின்றனர்.

உலகக் கோப்பை தொடரை மொபைலில் ஜியோ சினிமா மற்றும் வூட் (voot) ஆகிய அப் மூலம் பார்க்க முடியும்.

Sports 18 மற்றும் Sports 18 HD ஆகிய சேனல்கள் நேரலையில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை ஒளிபரப்புகின்றன. ஆனால் இந்த இரு சேனல்களுக்காக தனியாகக் கூடுதல் கட்டணம் செலுத்தித்தான் பார்க்க முடியும்.

watch fifa worldcup 2022 in sports 18 without any charge by TACTV

இந்நிலையில் மேற்கண்ட சேனல்களில் கூடுதல் கட்டணம் செலுத்தாமலேயே அரசு கேபிள் டிவி சந்தாதாரர்கள் பார்க்கலாம் எனத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ”தமிழ்நாட்டில் பெருகிவரும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு நற்செய்தி.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களின் கோரிக்கையை ஏற்று, கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து 2022 போட்டிகளை அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் SPORTS 18 சேனலில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி கண்டுகளிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

மோனிஷா

எழுத்தாளர் இமையத்துக்கு கன்னட கவி குவேம்பு இலக்கிய விருது!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *