பருவமழையை எதிர்கொள்ள போர்க்கால நடவடிக்கை: அமைச்சர் நேரு

தமிழகம்

“பருவமழையை எதிர்கொள்ள போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இதை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியாராஜன், மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் இன்று (நவம்பர் 1) ஆய்வு செய்தனர்.

Wartime action to counter monsoon minister nehru answer

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, “கடந்த வருடம் மழைநீர் தேங்கிய இடங்களில் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்றதால், மழைநீர் இந்த ஆண்டு அதிகமாக தேங்கவில்லை.

நேற்று இரவு முதல் சென்னை மாநகராட்சியின் சார்பில் 19,000 பேர் பணியில் உள்ளனர். மழைநீர் வடிகால் இல்லாத இடங்களில்தான் தற்போது மழைநீர் தேங்கி உள்ளது. பம்ப் மோட்டார்கள் கொண்டு அந்த பகுதிகளில் மழை நீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற போர்க்கால அடிப்படையில் பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, மாநகராட்சி இணைந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Wartime action to counter monsoon minister nehru answer

தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை உடனடியாக வெளியேற்ற முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தேங்கும் மழைநீரால் பாதிக்கப்பட்டால், கிட்டத்தட்ட 1 லட்சம் பேரை தங்கவைக்கும் அளவுக்கு முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. அவர்களுக்கு தேவையான நல்ல உணவு, குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுக்கால ஆட்சியில் எந்த பணியும் மேற்கொள்ளாமல், தற்போது தன்னுடைய இருப்பை நிரூபிக்க,

’வடிகால் பணிகளை விரைந்து முடியுங்கள்’ என பணிகள் நிறைவடையும் வேளையில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டு வருகிறார்” எனத் தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “எப்போதும் மழை நீர் தேங்கும் வால்டாக்ஸ் சாலையில், இன்று மழை நீர் தேங்கவில்லை.

Wartime action to counter monsoon minister nehru answer

நெடுஞ்சாலை, மாநகராட்சி என துறைகள் வித்தியாசம் இன்றி பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் போர்க்கால அடிப்படையில் ராணுவத்தைப்போல் மாநகராட்சி பணியாளர்கள் பணி மேற்கொண்டு வருகின்றனர்” என்றார்.

இந்த சந்திப்பின் போது சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஜெ.பிரகாஷ்

அமைச்சர் நேரு சொன்னது சரிதான்: ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை!

அனுமதியின்றி போராட்டம்: அண்ணாமலை கைது!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.